கடந்த சில மாதங்களாக கடையநல்லூர் மக்களிடைய பரவி வரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக நமது ஊரில் ஒரு வபாத் செய்தி கேள்விப்பட்டோம் .இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அணுக்கள் காய்ச்சல் காரணமாக குறைந்து ஒரு சில உயிர் பலி போயுள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ரத்தம் தேவைப்படுகிறது .இதை கருத்தில் கொண்டு நமது ஊர் இக்பால் நகர் ,மற்றும் இளைஞர் சங்கங்களை அணுகி அவர்களின் அனுமதி பெற்று மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் அல்லிமூப்பன் தெரு அல் இஸ்லாம் மதரசா(சங்கத்தில்) வைத்து கடந்த27-05-2011 வெள்ளிக் கிழமை அனைத்து இளைஞர் சங்கம் கூட்டம் நடைபெட்றது .இதில் 240 நண்பர்கள் தங்களுடைய ரத்தம் தானம் செய்ய முன்வந்து பெயர் கொடுத்துள்ளார்கள் .இதன் அடிப்படையில் கூடத்திற்கு ஏற்பாடு செய்த லெப்பை உஸ்மான் ஜபாருல்லாஹ் ,இத்ரிஸ் , ,ஹபீப் மற்றும் ரத்தம் தானம் செய்ய.இளைஞர் முன்வரவேண்டும்
1.லெப்பை உஸ்மான்-9976013480
2.இத்ரிஸ் -9965913593
3.ஜபாருல்லாஹ்- 4.ஹபீப்-
கடையநல்லூர் ரஹீம் ஸ்டோரில் பணம் திருட்டு.
கடையநல்லூர்.மே 29 . மெயின் பஜாரில் உள்ள ரஹீம் ஸ்டோர்உரிமையாளர் மதியம் வழக்கம் போல் கடையின் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்த அவர் , கதவு திறந்திருப்பதை கண்கொண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாபெட்டி மற்றும் அதில் இருந்தசுமார் 4 லட்ச ருபாய் மயமானதை அறிந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.மேலும் தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அட்டக்குளம் அருகே சாலை விபத்து
கடையநல்லூர் . நேற்று மதியம் (28.5.11) அட்டக்குளம் அருகே, குற்றாலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் திடிரென பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து அருகே நின்றுகொண்டிருந்த புல்டோசர் மீதுவேகமாக மோதியது.
மோதிய வேகத்தில் கார் கவிழ்ந்தது. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் காவல்துறைக்கும் மாஸ் அமைப்பிற்கும் தகவல் தெரிவித்தனர். மாஸ் அமைப்பினர் விரைந்து வந்து சாலை முழுதும் சிதறிக்கிடந்த கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தி சரிசெய்தனர்.
மேலும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பேய் பிசாசு உண்டா ?
பேய் பிசாசு உண்டு - இல்லை என பொதுமக்களிடையே இரு கருத்துக்கள் இருந்தாலும் உண்டு என நம்புபவர்களுக்கு அந்த பயத்தையும் , நம்பிக்கையும் போக்க மாஸ் அமைப்பு ஒரு சின்ன ஆய்வு மேற்கொண்டது.
நேற்று இரவு (29.5.11) அன்று மேலக்கடையநல்லூர் அருகே உள்ள சுடுகாட்டில், மாஸ் அமைப்பினர் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை பேய் வருகைக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் எந்த பேயும் வராததால் ஊர் திரும்பினர்.
இதுபற்றி மாஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் N.நகூர்மீரன் கூறுகையில் : "பேய் பிசாசு என்பது இல்லாத ஒன்று என்றும், அதை நிருபிக்கும் வகையில் மாஸ் இதுபோன்ற மக்கள் விழிப்புணர்வுக்கு செயலாற்றும் என்றும், மேலும் வளரும் மாணவ சமுதாயம் ,பேய் பிசாசு மீது மூடநம்பிக்கை கொள்வதிலிருந்து மீட்க வேண்டியது நம் கடமை " என்றார்.
கடையநல்லூர் 10 தேர்வில் மாணவ , மாணவிகள் சாதனை
நடந்துமுடிந்த 10 தேர்வின் முடிவுகள் நேற்று 27 -5 -2011 வெளியானது .இதில் ஹிதாயதுல் இஸ்லாம் மேல்நிலை பள்ளி மாணவர் P.RAJA RAM - 485 மார்க்குகள் பெற்று கடையநல்லூரில் முதல் மாணவராக தேர்வு பெற்றார்.
மசூத் தைக்கா மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி 85 %
முதல் மதிப்பெண் : N.S. AFIRN MARYM : 480/500
இரண்டாம் மதிப்பெண் : C.SAKER : 474 /500
மூன்றாம் மதிப்பெண் : T.J.MOHIDEEN MERAL RISWANA : 476 /500
ஹிதாயதுல் இஸ்லாம் மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி 92 %
முதல் மதிப்பெண் : P.RAJA RAM - 485 / 500
இரண்டாம் மதிப்பெண் : K.H.MOHAMED MUSAMMIL - 482 / 500
மூன்றாம் மதிப்பெண் : S.A. நஜீபா -479/500
தாருஸ்ஸலாம் மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி : 96%
முதல் மதிப்பெண் :P.M.KATHIJA JANU. : 483 / 500
இரண்டாம் மதிப்பெண் : M.S.MOHAMED SHAFIR 477 / 500
மூன்றாம் மதிப்பெண் :P.A.WAZIM AKRAM : 474/ 500
பேட்டை முஸ்லிம் மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி :95% முதல் மதிப்பெண் : ASHIK 463 இரண்டாம் மதிப்பெண் : AYISH SIDIQA 462
மூன்றாம் மதிப்பெண் : MHARAJ 459
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி : 82%
முதல் மதிப்பெண் : A.SORNAM LAKSHMI 477
இரண்டாம் மதிப்பெண் : A.AKILA 473 மூன்றாம் மதிப்பெண் : R.S.MENA 469
இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 20-ம் தேதி வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றன. பள்ளிகளின் மூலம் 8.5 லட்சம் பேரும், மொத்தமாக 9.5 லட்சம் மாணவ, மாணவியரும் தேர்வை எழுதினர்.மாணவ, மாணவியர் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், இணையதளங்கள், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த இணையதளம் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை வெளியிடும் அரசு இணையதளங்கள்: www.pallikalvi.in www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in
எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவைப் பெறுவதற்கு tnpubliclibraries.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மதிப்பெண் சான்றிதழ்: பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஜூன் 20-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு விண்ணப்பங்கள் மே 30 முதல் ஜூன் 3 வரை வழங்கப்பட உள்ளன.
சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் 29 முதல் ஜூலை 8 வரை நடைபெற உள்ளன.மறுகூட்டல்: மறுகூட்டலுக்கும் மே 30 முதல் ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
சி.டி. இல்லை: வழக்கமாக, தேர்வு முடிவுகள் அடங்கிய சி.டி.க்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு முடிவு வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அனுப்பப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்வு முடிவு சி.டி.க்கள் அனுப்பப்படவில்லை. பள்ளிகளில் ஒட்டுவதற்கான மதிப்பெண் பட்டியல் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.
பி.இ. கலந்தாய்வு: 4 இடங்களில் நடத்த திட்டம்: தமிழக அரசு
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னை உள்பட 4 இடங்களில் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.கலந்தாய்வு நடைமுறைகளை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 484 பொறியியல் கல்லூரிகளுக்குமான மாணவர் சேர்க்கை, இந்த ஒரு மையத்தின் மூலமே நடைபெற்று வருகிறது.
இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்தாய்வில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக, பெற்றோர் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வருபவர்கள், சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து, கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனால் பொருள் செலவும் ஏற்படுவதாக பெற்றோர் தெரிவித்து வருகின்றனர்.இந்த சிரமங்களை நீக்கும் வகையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னையில் மட்டுமல்லாமல், மாநிலத்தின் மேலும் சில இடங்களில் நடத்த வேண்டுமென பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வை பல இடங்களில் நடத்துவது என்பது, தேவையற்ற கால விரயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். கலந்தாய்வை ஒரே இடத்தில் நடத்துவதுதான் சிறந்தது என்று கூறி, பெற்றோரின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னையில் மட்டும் அல்லாமல் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்த, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும், கலந்தாய்வு நடைமுறைகளை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அல்லாமல், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் விநியோகிக்கத் தொடங்கிய 10 நாள்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. எனவே சென்னையில் மட்டுமின்றி மேலும் சில பகுதிகளில் கலந்தாய்வை நடத்துவதே சிறந்தது என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் உயர் அதிகாரிகள் கூறியது:
பொறியியல் கலந்தாய்வுக்கு, குறைந்த நாள்களே உள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 3. அதன் பிறகு ஒரு சில நாள்களில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு விடும். தொடர்ந்து ரேங்க் பட்டியல் தயாரிப்பது என அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜூன் மூன்றாம் வாரம் முதல் கலந்தாய்வும் தொடங்கி விடும்.
குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், கலந்தாய்வை சென்னையில் மட்டும் அல்லாமல் மேலும் சில இடங்களில் நடத்துவது என்பது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். தேவையற்ற குழப்பமும் ஏற்படும் என்றனர்.6 ஆண்டுகளுக்கு முன்பு... கடந்த 2004- 05 ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் அல்லாமல் 4 மையங்களில் நடத்தப்பட்டன.
ஆனால் பல்வேறு காரணங்களால் தேவையற்ற தாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டு வந்தன. எந்தக் கல்லூரியில் இடம் உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஒற்றைச் சாளர முறை மீண்டும் செயல்படுத்தப்பட்டு ஒரே மையமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது கலந்தாய்வு செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டதால் சில நொடிகளிலேயே கல்லூரிகளில் இடம் உள்ளதை அறிந்து கொள்ள முடியும். எனவே முன்பு உள்ளது போல் 4 மையங்களில் நடத்துவதால் காலவிரயம் ஏற்படாது என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ரஜினி சிங்கப்பூர் பயணம்: சிறுநீரக பாதிப்புக்கு நவீன சிகிச்சை
சிறுநீரக பாதிப்புக்கு நவீன டயாலிஸிஸ் சிகிச்சைபெற நடிகர் ரஜினிகாந்த் ஓரிரு நாளில் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்.சிறுநீரக பாதிப்புக்கு நவீன சிகிச்சை அளிக்க நடிகர் ரஜினிகாந்தை முதலில் லண்டன் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், நீண்ட நேர பயணத்தைத் தவிர்க்க, சென்னையிலிருந்து 4 மணி பயண நேரம் கொண்ட சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த்தின் உடல் நிலை, உட்கார்ந்து பயணம் செய்யும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 29-ம் தேதி ராணா படப்பிடிப்பு தொடக்க தினத்தன்று நடிகர் ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சிறுநீரக பாதிப்பு காரணமாக மூச்சுத் திணறல், அதீத உடல் சோர்வு தொடர்ந்ததால், மே 13-ம் தேதி இரவு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திடீர் முச்சுத் திணறல் காரணமாக மே 18-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதய மருத்துவ நிபுணர் எஸ்.தணிகாசலம் தலைமையிலான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஐந்து முறை ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 22) தனி அறைக்கு மீண்டும் மாற்றப்பட்டார். கடந்த நான்கு நாள்களாக தனி அறையில் நேரத்துக்கு நேரம் சாப்பிட்டு, டி.வி. பார்த்துக் கொண்டு, குடும்பத்தினருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட்டு வருகிறார்.இந்த நிலையில் பார்வையாளர்களைத் தவிர்க்கவும், மாறுபட்ட சூழ்நிலையில் டயாலிஸிஸ் சிகிச்சையைத் தொடரவும் அவரை "நேஷனல் கிட்னி பவுண்டேஷன் சிங்கப்பூர்' மருத்துவமனையில் சேர்க்க குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. சென்னையிலிருந்து அவரை தனி விமானத்தில் அழைத்துச் செல்வதா அல்லது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அழைத்துச் செல்வதா என குடும்பத்தினர் பரிசீலனை செய்து வருகின்றனர்.
பி.டெக், எம்.டெக். எம்.பி.ஏ. மாணவர் சேர்க்கை: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஜூன் 12-ந்தேதி “கவுன்சிலிங்”
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக கவுன்சிலிங் ஜூன் 12-ந்தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இயக்குனர் ஆர்.முத்து சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக கலந்தாய்வு திறந்த முறைப்படி நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பும் பணியை தொடங்கி விட்டோம். பி.டெக் நுழைவுத் தேர்வில் ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற முதல் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படுகிறது. அவர்களுக்கு ஜூன் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.
எம்.டெக், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை ஜூன் 17 மற்றும் 18-ந்தேதிகளில் நடைபெறுகிறது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அகில இந்திய நுழைவுத் தேர்வை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 126 பேர் எழுத பதிவு செய்தனர். பி.டெக் படிப்பில் சேர விரும்பி ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 335 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 2,468 பேர் எம்.டெக் படிப்பிற்கான நுழைவு தேர்வை எழுதினர். 1,376 பேர் எம்.பி.ஏ.விற்கும், 972 பேர் எம்.சி.ஏ.விற்கும் தேர்வு எழுதினர். நுழைவுத் தேர்வு ஏப்ரல் 23-ந்தேதி இந்தியா முழுவதும் 200 மையங்களில் நடந்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த வைபவ் குமார் நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தார். 2-வது இடம் கோவை ராம் பிரசாத்தும் 3-வது இடம் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த குமா ரும் பெற்றனர். நுழைவுத் தேர்வு முடிவு www.srmuniv.ac.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.முதல் 10 ரேங்க் மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி தொகை வழங்கப்படும். கல்லூரி நிறுவனரின் கல்வி உதவி பெற அவர்கள் தகுதி பெற்றவர் ஆவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கடையநல்லூர் +2 தேர்வில் மாணவ , மாணவிகள் சாதனைகள்
நடந்துமுடிந்த +2 தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் 9 -5 -2011 வெளியானது .இதில் மசூத் தைக்கா மேல்நிலைப்பள்ளி மாணவர் E.U. முஹம்மத் ராசித் - 1158 மார்க்குகள் பெற்று கடையநல்லூரில் முதல் மாணவராக தேர்வு பெற்றார்.
மசூத் தைக்கா மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி 93 %
முதல் மதிப்பெண் : E.U. முஹம்மத் ராசித் : 1158 /1200
இரண்டாம் மதிப்பெண் : P.S. முஹைதீன் பாத்திமா : 1077 /1200
மூன்றாம் மதிப்பெண் : M. ஜுமானா பர்வீன் : 1058 /1200
ஹிதாயதுல் இஸ்லாம் மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி 96 %
முதல் மதிப்பெண் : நூருல் S முபினா - 1126 / 1200
இரண்டாம் மதிப்பெண் : அ. உ. நசிருதீன் - 1125 / 1200
மூன்றாம் மதிப்பெண் : S.A. நஜீபா - 1106 /1200
தாருஸ்ஸலாம் மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி : 95 %
முதல் மதிப்பெண் : K.A. உமர் நசீப் : 1112 /1200
இரண்டாம் மதிப்பெண் : P.A. அமீனா 1088 / 1200
மூன்றாம் மதிப்பெண் : V.K. ரிழ்வனா : 1087 / 1200
பேட்டை முஸ்லிம் மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி :96% முதல் மதிப்பெண் : E.ஜெய்லானி 1087 இரண்டாம் மதிப்பெண் : A.பிஸ்மி நிஷா 980 மூன்றாம் மதிப்பெண் : S.சேகா 975
அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
மொத்த தேர்ச்சி : 95%
முதல் மதிப்பெண் : M.ஜோதி லட்சுமி 1083
இரண்டாம் மதிப்பெண் : Mc தேவி கவிதாமணி 1079
மூன்றாம் மதிப்பெண் : N.சுபா 1064
அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
முதல் மதிப்பெண் :M .சாமி துரை 1107
இரண்டாம் மதிப்பெண் : A .முகமது ராஸிக் 1080
மூன்றாம் மதிப்பெண் : K .ராம்குமார் 1048
கடையநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே விபத்து
கடையநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு பேருந்து மீது அதன் பின்னால்வந்துகொண்டிருந்த லாரி ஒன்று மோதியது.இதில் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
இதில் பேருந்தில் இருந்த பயணிகள் சிலர்க்கு சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்துக்குள்ளான வாகனங்களின் கண்ணாடிகள் சாலை முழுதும் சிதறி கிடந்தன .
அதை அடுத்து மாஸ் அமைபிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .பின்னர் மாஸ் சமூக அமைப்பை சார்ந்த சேவகர் படை சாலையை சீர்செய்தனர்.
பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: ஜூன் மாதம் நடக்கிறது
பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுக்கான விண்ணப்பம் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவராக தேர்வு எழுதிய மாணவர்களில் அதிகபட்சம் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே வருகிற 13-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 13-ந் தேதி மாலைக்குள் விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தை பணமாக தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒரு பாடத்திற்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்று பாடங்களுக்கு ரூ.185 தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மொத்த தேர்வு கட்டணத்தை ஒரே கருவூல சலானில் செலுத்தியதற்கான அசல் கருவூலச்சீட்டு மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பிறசேர்க்கை படிவம் ஆகியவற்றை 16-ந் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்வு எழுதி 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் அதற்கு முன்பு தேர்வு எழுதி தோல்வியுற்ற தனித் தேர்வர்களும் இந்த சிறப்பு துணை தேர்வை எழுதலாம்.
இவர்கள் விழுப்புரம், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகங்களில் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான கருவூலச்சீட்டுகள் 24-ந் தேதி மாலை 5 மணிக்குள் துணை இயக்குனர், அரசு தேர்வுகளின் மண்டல துணை இயக்குனர் அலுவலகம், ஆற்றங்கரை வீதி, கடலூர்-1 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.
அதிகமாக மார்க் எடுக்க சமஸ்கிருதம் படித்தேன்; முதல் மாணவி சந்தியா பேட்டி
பிளஸ்-2 தேர்வில் ஒட்டு மொத்த பிரிவில் மாணவி சந்தியா 1191 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சமஸ்கிருதத்தை முதன்மை பாடமாக எடுத்துள்ளார். குரோம்பேட்டை எஸ். ஆர்.டி.எப். வித்யாலயா பள்ளி மாணவியான இவர் அப் பகுதியில் உள்ள அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கண்ணன். மந்தைவெளியில் உள்ள பி.எஸ்.என்.எல். அதிகாரியாக உள்ளார். தாய் சிவகாமி இவரும் பி.எஸ்.என்.எல். அதிகாரியாக குரோம்பேட்டையில் பணிபுரிகிறார். சந்தியாவுக்கு சிவசங்கரி என்ற சகோதரி உள்ளார். அவர் “பி.இ.” முடித்துள்ளார்.
மாநிலத்தில் முதலிடம் பிடித்தது குறித்து சந்தியா கூறியதாவது:-
“நான் முக்கிய பாடப் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என்பதற்காக சமஸ்கிருதத்தை விருப்பபாடமாக தேர்வு செய்தேன். தமிழை விருப்பபாடமாக எடுத்து இருந்தால் அதற்கும் படிப்பதற்காக கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். சமஸ்கிருதம் படிப்பதற்கு எளிதாக இருக்கும் நான் தினமும் இரவு 10 மணி வரை படிப்பேன்.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். மிக சாதாரணமாக தான் படித்தேன். கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையாகவும் இருக்கிறேன். கடவுளின் அருளும், பள்ளி ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் தான் என்னை இந்த அளவு சாதிக்க வைத்துள்ளது. எதிர்காலத்தில் அக்காவை போல் என்ஜினீயரிங் படிக்க வேண்டும். அதன் பிறகு சிவில் சர்வீஸ் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்”. இவ்வாறு அவர் கூறினார். பள்ளியின் தாளாளர் ரவீந்திரன், முதல்வர் பிரேமா மகாதேவன், மற்றும் ஆசிரியர்கள், மாணவி சந்தியாவை பாராட்டினார்கள். தாளாளர் ரவீந்திரன் கூறும் போது, “பள்ளி தொடங்கி 37 ஆண்டுகளில் முதல் முறையாக மாநி லத்தில் முதலிடத்தை பிடித் துள்ளோம். மேலும் எங்கள் பள்ளியில் படித்துள்ள பல மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
231 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அவர்களில் 53 பேர் 1100க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்கள். 25-க்கும் மேற்பட்டவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்” என்றார்.