Doctor Details Colleges Auto Number Free Ringtone Free Wallpaper Free Themes      
     
  கடையநல்லூரின் முதல் மந்திரி S.M. அப்துல் மஜீத் அவர்களின் சாதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாறு.  
 

S.M. அப்துல் மஜீத் அவர்களின் தகப்பனார் பெயர் S. மசூது சாஹிப்
அவர்களின் தாயார் பெயர் பாத்திமா
இவருடன் 5 சகோதரர்கள் மற்றும் 5 சகோதரிகள் பிறந்துள்ளனர்.
இவருடைய பெரிய தகப்பனார் பெயர் S. முஹைதீன் சாஹிப்.
மேலும் இவர் 15, புதுதெரு, கடையநல்லூர். இந்த முகவரில் வசித்தார்
.

 
   

S.M. அப்துல் மஜீத் அவர்களின் தகப்பனார். S. மசூது சாஹிப்

S.M. அப்துல் மஜீத் அவர்களின் பெரிய தகப்பனார் S. முஹைதீன் சாஹிப்.

முன்னாள் அமைச்சர் S.M.A. மஜீது

இறையருளால் ஏறத்தாழ 80 வயது கடையநல்லூர் முன்னாள் அமைச்சர் S.M. அப்துல் மஜீத் சாகிபு  நம்மை விட்டு மறைந்து விட்டார். அவர் தம் வாழ்வில் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் இடையில் இறையருளால் சாதனைகள் பல புரிந்து, இவர் 4 ஆண் பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகளும்  உடன் பேரன் பேத்திகளுடன் தனது சொந்த ஊரில் வாழ்ந்தார்.
அவர் 05.05.1924ம் ஆண்டில் பிறந்தார். சிறுவயதில் அவர் பெரியப்பா நிர்வாகித்து வந்த கீழக்கட்சிக்கு சொந்தமான தாருஸ்ஸலாம் பள்ளியிலும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின் பாளையங்கோட்டை St.Xavires கல்லூரியில் இண்டர் மீடியேட் வரை படித்தார்.
பின் அவர்கள் குடும்ப வியாபாரமான லுங்கி உற்பத்தியில் முழுமூச்சாக ஈடுபாடு கொண்டு லுங்கி உற்பத்தியிலும், விற்பனையிலும் தன் கவனமனைத்தும் செலுத்தினார். பர்மா, சிலோன் நாடுகளுக்கு லுங்கிகளை ஏற்றுமதியும் செய்தார்.
1947ல் கராச்சி சென்று அங்கு 1 வருடம் ஏற்றுமதி வியாபாரம் செய்தார். அப்போது காயிதே ஆஜம் முகம்மது அலி ஜின்னா காலமாகி அடக்க நேரத்தில் ஜனாஸா (மையத் தொழுகை) தொழுகையில் கலந்து கொண்டார்.
இந்த கால கட்டத்தில் முஸ்லிம் யூத் மஜ்ஸில் என்ற பொது நூலகம் அமைப்பதில் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார். அது மட்டுமல்ல இரவுப் பாடசாலை நடத்தி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

லுங்கி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர் நூலுக்கு சாயம் ஏற்றுவதில் மிகப்பெரிய நிபுணராகத் திகழ்ந்தார். அவர் எண்ணத்தில் உதித்த வண்ணக் கலவைகளை நூலில் தேய்த்து அவர் குறித்த பத்தி டிசைன்களில் லுங்கி உற்பத்தியாகி Tie Brand  பிரசித்தி பெற்ற பெயரில் விற்பனையாயிற்று. அது மட்டுமல்ல அவர் சாயமேற்றி அனுப்பிய நூல் திண்டிவனம், அனந்தபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் டிப்போவில் உற்பத்தி செய்து மதராஸ் லுங்கிகளாக வடநாட்டு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனை அப்போதும் சரி இப்போதும் சரி கடையநல்லூர் மஜீத் சாகிப் ஒருவரால் தான் இந்த சாதனையை செய்ய முடிந்தது.
இதே கால கட்டத்தில் அவர்களுக்குச் சொந்தமான ஏறத்தாழ 100 ஏக்கர் நஞ்சை, புஞ்சைகள் இருந்தன. இவற்றில் காடு, மேடுகளை கரடு முரடுகளைத் திருத்தி வளமிக்க பூமியாக்கி, கிணறுகள் வெட்டி தென்னை, வாழை, திராட்சை, எலுமிச்சை சவுக்குத் தோட்டங்களாக மாற்றிட அல்லும் பகலும் பாடுபட்டு வெற்றியும் கண்டார். ஓய்வில்லாத உழைப்பு, சலிப்பே காணாத உற்சாகம், எடுத்ததை தொடுத்து முடிக்கும் ஆற்றல், அதுமட்டும் அல்ல நாணயம், நம்பிக்கை, எதையும் வெளிப்படையாகச் செய்யும் மனம்திறந்த போக்கு இந்த நற்குணங்கள் தான் அவருக்கு காய கல்பமாக இருந்ததால் அவர் இளமையோடும், அழகோடும் திகழ்ந்தார். இவ்வளவு சூழ்நிலையில் கோழிப்பண்ணை, தேனீ வளர்த்தல், நல்ல அதிக இன பால் பெருக்கு பசுக்கள் வளரத்தல் இவையெல்லாம் ஒரே நேரத்தில் செய்தர் என்றால் அவர் எத்தனை பெரிய சதனையாளராக இருக்க வேண்டும். அது மட்டும் அல்ல, சென்னை, புதுக்கல்லூரி துவக்க மிகவும் உதவியும், ஆரம்ப அங்கத்தினர்கள் பலரை கடையநல்லூர் மேலப்பாளையம் முதலிய ஊரர்களிலுள்ளவர்களை சேர்க்க உதவினார், தானும் அங்கத்தினராக இணைந்தார்.

இனி தான் பொதுவாழ்வில் ஒரு துருவ நட்சத்திரமாக முகிழத் தொடங்கினார்.  கதர், வேட்டி, கதர்சட்டை அப்போது தான் அணிய ஆரபித்தார், காங்கிரஸிலும் இணைந்தார்.
1959 - 1962 ல் அவர்  மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கன்வீனர் (DIST YOUTH CONMGRESS CONVERNER) ஆனார். 1959 - 60 ல் குற்றாலத்தில் மாநில இளைஞர் மாநாட்டை நடத்தும் பொறுப்பு இவரிடம் வந்நது.
மஜீத் சாகிபின் மாயச்சித்து அங்குதான் வெளிப்படுகிறது. இப்போது நடக்கும் மாநாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியாக அந்த மாநாடுதான் இருக்கிறது. சீரோடும், சிறப்போடும், எழுச்சியோடும், ஏற்றத்தோடும் நடந்த இந்த மாநில மாநாடு இன்று நினைத்தாலும் இனிக்கும் இளைஞர் தம் மாநாடாக திகழ்கிறது. 25,000 இளைஞர்கள் லட்சிய வெறியோடு கூடி கட்டுக்கோப்புடன் காங்கிரஸின் உண்மையான தொண்டு உணர்வு வெளிப்பட நடந்த பிரம்மாண்டமான மாநாடு தான் அது. பெருந்தலைவர் காமராசர் தலைவர்கள் புடை சூழ இந்த மாநாட்டில் பங்கு கொண்டார். மாநாட்டின் பாங்கு இளைஞர்களின் எழுச்சி பெரியவர்களின் நெகிழ்ச்சி மிகப்பெரும் வெற்றியாக இந்த மாநாடு அமைந்தது. இதனை வெற்றிகரமாக தலைமை ஏற்று நடத்திய மஜீத் சாகிப் பெருந்தலைவர் காமராஜ் கண்டு எடுத்த முத்து.  S.M.A  மஜீத் சாகிபுக்கு 1962 ம் ஆண்டில் சங்கரன்கோவில் தொகுதிக்கு காங்கிரஸ் MLA  ஆக வாய்ப்பு கிடைத்து அதில் வெற்றியும் பெற்றார்.
பெருந்தலைவர் காமராசர் தன் மனம் கவர்ந்த  S.M.A மஜீத் சாகிப் அவர்களை தனது 9 பேர் கொண்ட மந்திரி சபையில் ஒருவராக ஆக்கினாரர்  ஆச்சர்யம்… அதிசயம்… ஆனால் உண்மை.

1962 - 67 இந்த 5 வருடங்கள் காமராசர், பக்தவச்சலம் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் (Local Administration and Community Development Panchayant)  அமைச்சராகப் பணியாற்றினார். அமைச்சராக இருந்த இந்த 5 வருடத்தில் தமிழக அரசியலில் அவர் ஆற்றிய சாதனைகள் சில.
1.         கிராம, நகர அதிகாரிகள் உயர்வு பெற்று நகராட்சி அதிகாரிகளாக பணியாற்ற வகை செய்யப்பட்டது.
2.         நகராட்சிகளில், தேவைகளை ரகசிய டெண்டர் மூலம் பெற்று நகர்மன்றங்களில் பொருள்கள் வாங்கும் நடைமுறையில் சீர்கேடுகளுக்கும் அதன் மூலமான நட் டத்திற்கும் ஈடுசெய்யும் படி பல நகராட்சிக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை ஈடுபட்டுள்ள அங்கத்தினர்கள் ஈடுகட்ட வேண்டும் என்ற நடைமுறை கண்டிப்புடன் செயலாக்கப்பட்டது.
3.         திரு. காமராசர் விருப்பப்படி திரு. பக்தவச்சலம் அமைச்சரவையில் மாநில வஃபு அங்கத்தினர்களை தேர்வு செய்து புகார்களுக்கு இடமளிக்காமல் நல்ல முறையில் நிர்வாகம் நடக்க மிக தீவிர கவனம் எடுக்கப்பட்டது. இச்சமயம் மதுரை வஃபு சொத்தை மதுரை நகராட்சி மீனாட்சியம்மாள் கோவில் இடப்புறமுள்ள நில அஜிர்தம் செய்து அதற்குரிய பணத்தை முடக்கிவைத்து மதுரை வஃபு கல்லூரியை துவக்க உதவியாக பணத்தை நகராட்சியிடமிருந்து கொடுக்க ஏற்பாடாயிற்று.
4.         தமிழை தாய் மொழியாகக் கொண்ட எல்லா முஸ்லிம்களும் பிரிவின்றி, பிற்பட்ட லெப்பை இனமாக அறிவிக்கப்பட்டனர். அதன் மூலம் அரசு சலுகைகள் எல்லா முஸ்லிம்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
5.         எல்லா பள்ளிவாசல்களிலும் Loud Speaker மூலம் பாங்கு சொல்ல அரசு ஆணையிட்டார்.
6.         அமைச்சராக விடுதிகளில் தங்கும்  அதிகாரிகளின் உபசரிப்பை, அதனால் ஏற்படும் செலவீனங்களையும் அனுமதிக்கவில்லை.
7.         புதிய திருப்பமாக சென்னை கொத்தவால்சாவடி மற்றும் திருச்சி காந்தி மாரர்க்கெட் இடங்களை மாறுவேடத்தில் இரகசியமாகச் சென்று அவ்விடங்களை சோதனை செய்து அங்கு நடக்கும் ஊழல்களையும் சுகாதாரக் கேடுகளையும் அநாகரிகப் போக்குகளையும் நிறுத்த வழி செய்தார்.
8.         கடையநல்லூர் தொகுதியில் கருப்பாநதி திட்டம் இவர் அமைச்சராக இருந்த போது தான் கொண்டுவரப்பட்டது.
9.         பெரியாற்றில் குடிதண்ணீருக்காக ஆழ்கிணறு வெட்டி குடிதண்ணீர் திட்டத்தை கொண்டுவந்தார்.
10.       அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி முதன் முதலில் பஞ்சாயத்து யூனியன் ஆகியவை ஏற்பட்டது இவர் பதவியிலிருந்த காலத்தில் தான்.
11.       கடையநல்லூர் டிஸ்பென்சரியாக இயங்கிவந்ததை மாற்றி 40 படுக்கைகளையும் நவீன கருவிகளையும் கொண்ட சர்க்கார்அஸ்பத்திரியாக உயர்த்தப்பட்டது.
12.       சென்னையில் அவரர்அமைச்சராக இருந்த வீட்டைச் சுற்றி 11 ஏக்கர்இடம் தரிசாகக் கிடந்தது. அந்த காலி இடத்தில் வியக்கத்தகு பசுமைப் புரட்சியை சமூகநலத்திட்டத்தின் கீழ் (Community Development) உருவாக்கினார் மற்றும் அந்த காலி இடத்தை பண்படுத்தி கலப்பின ஓட்டுரக 3 வகை புல்களை (para,napier, guinea) வளர்த்தார். அதன் நடுவில் வரிசையாக அமைந்த பண்ணையில் 20 அடி இடைவெளியில் ஓட்டுரக (Blue Gun & Red Gun ) நீலகிரி மரங்களை நட்டினார். மேலும் கலப்பின கோழி இனங்களையும், செய்திகள் அனுப்ப உதவும் ரோமரக புறாக்களையும், மற்றும கலப்பின பசுக்களையும் வளர்த்தார். வீரிய ஒட்டுரகங்களுக்கு பயன்படும் 3 ரக மலேசியா தென்னை மரங்கள் 25 வளர்த்தார். அதன் இடையே மேல் நாட்டு உள்நாட்டு விதவிதமான காய்கனிகளை பயிர்செய்து தமிழ் நாட்டின் “சிறந்த விவசாயி” என்ற கருத்தை அமைச்சர் திரு. சுக்கன் மூலம் பெற்றது நினைவு கூறத்தக்கது.
13.       சுருங்கச் சொன்னால் லஞ்ச லாவண்யம் அற்ற கரைபடாத கைகளுக்கு சொந்தக்காராக அவர் பேரும், புகழும் பெற்றார். அன்று அமைச்சராக இருந்த மஜீத் சாகிபு லட்சக்கணக்கில் தன் சொந்த பணத்தைதான் இழந்துள்ளார் அடக்கமும், பணிவும் என்றும் அவரிடம் உண்டு.
14.       மிசா காலத்தில் திரு. எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது இயங்கி வந்த தமிழ்நாடு வக்ஃபுவாரிய அங்கத்தினராக பணியாற்றி வந்தார். அப்பொழுது 1979ல் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி ஊர் திரும்பும் போது சென்னையில் வைத்து ஏற்பட்ட இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்த உடன் வக்ஃபு வாரிய அங்கத்தினர் பதவியை விட்டு விலகினார்.
15.       அரசியல் ஈடுபாடுகளை குறைத்துக் கொண்டு ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் வேதம் மார்க்க வேதாதங்களை ஓதுவது, தொழுவது என்று தன் நேரத்தை பயன்படுத்துகிறார். திருமறை கூறும் கீழ்கண்ட வசனமே அவர் அடிக்கடி நினைவுகூறுவது.
“சத்தியமே வெல்லும் அசத்தியம் அழியும் அசத்தியம் அழிந்தே தீரும்!”.

 
     
     
 

 

   
 
இந்திரா காந்தியுடன் மந்திரி மஜீத் அவர்கள்
இந்திரா காந்தியுடன் மந்திரி மஜீத் அவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மூப்பனாருடன் மந்திரி மஜீத் அவர்கள்
மூப்பனாருடன் மந்திரி மஜீத் அவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பதவி ஏற்கும் போது எடுத்த புகைப்படம்
பதவி ஏற்கும் போது எடுத்த புகைப்படம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பாராளுமன்றத்தில் மந்திரி மஜீத் அவர்கள்
மந்திரி மஜீத் அவர்கள் தனது வீட்டில் இருக்கும் போது எடுத்த புகைப்படம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
     
Copyright © 2010 Kadayanallur.net . All rights reserved. Site Powered By IT HIGHWAY