| |
கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை (KAAST), இன்டெல் கம்ப்யூட்டர் & கடையநல்லூர் ஒ.ஆர்.ஜி. இணைந்து நடத்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் இன்று (06.02.2010) மறவர் திருமண மண்டபத்தில் மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்நிகழ்ச்சியை திருமதி R பிரேமாவதி MA., M.Ed., (மாவட்ட கல்வி அலுவலர்) அவர்கள் துவங்கி வைத்தார். மேலும் முனைவர் பேராசிரியர் அபுதீன் அவர்கள் பயிற்சி முகாமை முன்னின்று நடத்தினார். இதில் கடையநல்லூர் காவல் துறை ஆய்வாளர் திரு A விஜயகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திரு செய்யது அஹமது முஹைதீன் (உரிமையாளர் கானித் செல் காம்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். இதில் மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர். |
|