Doctor Details Colleges Auto Number Free Ringtone Free Wallpaper Free Themes      
     
  Articles :
 
 

தமிழ் ஈழமும், முஸ்லிம்களும்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு இராணுவத்திற்கும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. விடுதலை புலிகளை வீழ்த்தி விட்டோம் என்ற வெற்றிக்களிப்பில் திளைக்கிறது இலங்கை அரசு. இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியதற்காக மக்கள் தன்னையே மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற ஆசையில்,எதிர்பார்ப்பில் இலங்கை ஜனாதிபதி ராஜ பக்சே, தனது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிவிட்டார். யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில் பெரும் பங்கு வகித அந்நாட்டின் இராணுவத் தளபதி பொன்.சேகா தனது பதவியிலிருந்து விலகி ராஜபக்சேவை எதிர்த்து தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
இலங்கை நிலவரம் இப்படி இருக்க, உலகெங்கிலுமுள்ள தமிழ் உணர்வாளர்கள் கயறு நிலையில் நிற்கின்றனர்.  பிரபாகரன் மரணமடையவில்லை; மீண்டும் புதுதேம்புடன் கிளம்பி வந்து இலங்கையில் தமிழ் ஈழம் மலர்ந்திடப் போராடுவர் என்று வைகோ உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் கோரி வருகின்றனர். இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், அதற்க்கு தமிழக முதல்வர் கருணாநிதி துணை போய் விட்டார். என்றும் இந்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஊடகங்களில் இந்திய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக குறை கோரி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இப்படி தமிழகத்தில் சூடான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஒரு விஷயத்தை  இலங்கை தமிழ் தலைவர்களும், தமிழக தலைவர்களும் மிக வசதியாக மறைத்து விட்டனர். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றிய விஷயமே அது.
இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் ஈழத் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. ஒன்று பட்ட இலங்கையிலேயே தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலை நாட்டிட ஜனநாயக முறையில் போராட முடியும் என நம்புகிறார்கள். தனி ஈழக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்க்காக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் சொல்ல வொண்ணா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களின் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டன. அவர்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பெருத்த சேதங்கள் விளைவிக்கப்பட்டன. சொந்த மண்ணிலேயே அவர்கள் அகதிகளாக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் இந்த கோர வன்முறை தாக்குதல்கள் பற்றி தமிழ் செய்திதாள்களும், ஊடகங்களும் இருட்டடிப்பு செய்து, விடுதலைப் புலிகளின் உண்மையான முகம் தமிழக மக்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டன. தினமணி நாளிதழில் பாவை சந்திரன் தொடர்ந்து எழுதிய 'ஈழத் தமிழர் வரலாறு' தொடரிலும், தமிழ் முஸ்லீம்கள் பட்ட வேதனைகள் - இன்னல்கள் பற்றி குறிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை என்பதையும் தமிழ் முஸ்லீம் சமுதாயம் கவலையுடன் நோக்க வேண்டும்.
இந்நிலையில் இலங்கை தமிழ் முஸ்லீம்களின் பூர்வீகம் பற்றியும், அவர்களின் கடந்த கால வரலாறு பற்றியும், தமிழ் ஈழம் பற்றிய அவர்களின் நிலைப்பாடு பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது இன்றைய அவரசரத் தேவையாகும்.
பூர்வீகம்

கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் நிகழ்ந்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக் ஆளுநர் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபின் கொடுங்கோன்மை காரணமாக 226 அரபு முஸ்லிம் குடும்பங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி, கடல் மார்க்கமாக இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கொற்கை வந்து (தற்போதைய காயல்பட்டிணம்) அங்கேயே தங்கி வாழலாயினர். சில ஆண்டுகளுக்குப் பின், இங்கு வந்த அரபுக் குடும்பங்களில் சில, பக்கத்துக்கு நாடான இலங்கைக்கு சென்று குடியேறினர். அங்கு சென்ற இம்மக்கள், இலங்கையின் பூர்வீக மக்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர், இஸ்லாமிய இறைநேசச் செல்வர்கள் (கல்வத்து நாயகம் போன்றோர்கள்), வணிகர்கள் ஆகியோரின் பரப்புரை காரணமாக ஏராளமான தமிழ் மக்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். தென் தமிழகத்திலிருந்தும் பல்வேறு காலகட்டங்களில் தமிழ் முஸ்லிம்கள் இலங்கையில் குடியேறினர்.
மக்கள் தொகைச் செறிவு
இலங்கை மக்கள் தொகையில் 7.12 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள். 1981 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் மக்கள் தொகை பத்து லட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் ஆகும் (10.56.000). தற்போதைய கணக்கெடுப்பின் படி இது, 15 இலட்சத்தை எட்டியிருக்க கூடும். முஸ்லிம்களில் அறுபது சதவிகிதத்தினர் இலங்கையின் தெற்கு (கொழும்பு), மேற்கு, மத்திய மாகாணங்களில் வசித்து வருகின்றனர். ஆனால், இம்மக்கள் இந்த மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அரசியல் ரீதியில் ஒரு பெரிய சக்தியாக ருவேடுக்க இம்மக்களுக்கு வாய்ப்பு இல்லாது போயிற்று. இதற்க்கு நேர்மாறாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, வன்னி மன்னார் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளக் கூடிய அளவிற்குக் கணிசமான செறிவுடன் வாழ்ந்து வருகின்றனர். அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, வன்னி மன்னார் ஆகிய மாவட்டங்களில் முறையே 42, 24, 29, 27 என்ற சதவிகிதத்தில் முஸ்லிம்கள் உள்ளனர். ஒரே இடஹில் அதிகச் செறிவுடன் வாழும் காரணத்தால், இம்மக்கள் அரசியல் ரீதியில் ஒரு சக்தியாக உருவெடுக்க முடிந்தது.
வாழ்க்கை முறை
கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் சிறு நில உடைமையாளர்களாகவும், நெசவாளர்களாகவும், (நீண்ட கடற்கரை அமைந்துள்ளதன் காரணமாக) இருந்தனர். இஸ்லாமிய சமய மரபுகளைக் கடைபிடிப்பதில் அதிகக் கவனம் கொண்டவர்களாகவும், சமூகக் கட்டுப்பாடும், இறுக்கமான உறவுகளும் கொண்ட மக்களாகவும் இப்பகுதி முஸ்லிம்கள் விளங்கினர்.
தலை நகர் கொழும்பிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர். இதன் காரணமாக, பொருளாதாரத்தில் இவர்கள், பிற மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களைக் காட்டிலும் சிறப்புற்று விளங்கினர். கொழும்பில் உள்ள சிங்கள தமிழ் வணிகர்களோடு இவர்கள் போட்டி போடும் நிலையிலும் இருந்தனர்.
மருக்கு, மத்திய மாகாணங்களில் வசித்து வரும் முஸ்லிம்கள் சிறு வணிகர்களாகவும், கைவினைஞர்களாகவும், சிறு குடிசைத் தொழில்கள் செய்பவர்களாகவும் விளங்கி வந்தனர்.
விடுதலைக்கு முன்னரும், விடுதலை பெற்ற பின்னர் பல ஆண்டுகளும், தெற்குப் பகுதி முஸ்லிம்களே (கொழும்பு) அரசியலில் ஓரளவு பங்கு பெற்று வந்தனர். கிழக்கு மாகான முஸ்லிம்களின் மக்டியில் அரசியல் விழிப்பு உணர்வு ஏற்படாத அந்தக் காலகட்டத்தில், இந்த தெற்கு  மாகான முஸ்லிம் அரசியல் பிரமுகர்களே அவர்களுக்கு வழிகாட்டினர்.
பிளவின் தொடக்கம்
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் வாழும் முஸ்லிம்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களே. சிங்களத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. தொடர்ந்து பின்னெடுன் காலமாக தமிழர்களுக்கு (தமிழ் பேசும் இந்துக்கள் - கிறிஸ்துவர்கள்) முஸ்லிம்களுக்கும் நல்லுறவே நிலவி வந்துள்ளது. எவ்விதமான பிணக்குமின்றி இரு சமூக மக்களும் அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இந்த நல்லுறவைக் குலைக்கும் வண்ணம் சில நிகழ்ச்சிகள் நடந்தேறின. தமிழ்ப் பிரமுகர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சைவ - வளால சித்தாந்தம்,  இந்த சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்தோர், சைவ வேலார்களை உயர்வாகவும், மற்றவர்களை தாழ்வாகவும் கற்பித்தனர். முஸ்லிம்களைத் 'தூய்மையற்றவர்கள்' என்றும் 'தொப்பிபுரட்டிகள்' என்றும் இழிவுபடுத்தினர். பொன் ராமநாதன் போன்ற தமிழ் தலைவர்கள் ' முஸ்லிம்கள் தனிப்பிரிவினர் அல்லர்: அவர்கள் தமிழர்களே" என்று முச்ல்ம்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். சைவ - வேளாள சிதாந்திவாதிகளின் இந்தப் புதிய நிலைப்பாடு முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வணிகத்தில் சிறப்புற்று விளங்கியது, பிற சிங்கள தமிழ் வணிகர்கள் மத்தியில் பொறாமையை ஏற்படுத்தியது. 1915 ஆம் ஆண்டு, கொழும்பு நகரின் பல இடங்களில் வணிகப்போட்டி காரணமாக மோதல்கள் வெடித்தன. முஸ்லிம் வணிகர்கள் பலர் சிங்களர்களால் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த கலவரங்களின் போது, தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு ஆதரவாகவும் இருந்தனர். ஆனால், அப்போதிருந்த ஆங்கிலேய அரசு நடுநிலையுடன் செயல்பட்டது. கலவரத்திற்கு காரணமான சிங்களர்கள் பலர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட சிலருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், பொன். ராமநாதன் போன்ற தமிழ் தலைவர்கள் லண்டன் சென்று மகாராணியை சந்தித்து சிங்களர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். தமிழர் தலைவர்களின் இந்த செயல், முஸ்லிம்களிடையில் கசப்பு உணர்ச்சியை ஏற்படுத்தியது.
1889 ஆம் ஆண்டு வரை, இலங்கை சட்ட சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநித்துவம் இருந்தது. இதில் முஸ்லிம்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனித்துவமான சமூகம் என்றும், தங்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கைக்கு தமிழர் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம்கள் தமிழர்களே: எனவே அவர்கள ஒட்டுமொத தமிழ் சமூகத்தில் அடங்கோர் என்றனர். எனினும், முஸ்லிம்களின் இடையறாத போராட்டம் காரணமாக சட்டசபையில் தனிப் பிரதிநித்துவம் பெற்றனர்.
இப்படி சமூக, தொழில், அரசியல் ரீதியாகவும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில்  பிளவுகள் தோன்றின.
விடுதலைக்கு பின்
இலங்கை விடுதலை பெற்ற பிறகு, அங்கு நாடாளுமன்ற ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கு வாக்குரிமை என்ற நிலை ஏற்பட்டது. முஸ்லிம்கள், சிங்களர்கள் நடத்தும் அரசியல் காட்சிகளில் இணைந்து தெற்கிலும், கிழக்கிலும் சில இடங்களை கைப்பற்றி சட்ட சபையிலும், நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றனர்.
1960 க்குப் பின்னர், கிழக்கு மாகான முஸ்லிம்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வு உணர்ச்சி ஏற்பட்டது. ஏராளமான முஸ்லிம்கள் கல்வி கற்றனர். முஸ்லிம்கள் பெரும்பாமையாக வசிக்கும் இடங்களில் முஸ்லிம் பாடசாலைகள் அரசின் உதவியுடன் தொடக்கப்பட்டன. அப்போது, இலங்கையில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் முஸ்லிம்கள் நடத்தும் பாடசாலைகளில் அரபு மொழி கற்று கொடுக்க ஆலிம்களை நியமித்தார். அரசின் இத்தகைய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்கள் பெருமளவு கல்வி கற்று ஆசிரியர்களாகவும், அரசுத் துறைகளிலும் வேலை வாய்ப்பினைப் பெற்றனர். முஸ்லிம்கள் பெருமளவு அரசுப்பணிகளில் சேர்ந்த அந்த காலகட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் இல்ல பல்வேறு அரசுத் துறைகளில் தமிழர்களே உயர் அதிகாரிகளாக இருந்தனர். புதிதாகப் பணியில் சேர்ந்த முஸ்லிம்களை அந்த அதிகாரிகள் நியாய உணர்வோடும், நடு நிலையோடும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு முஸ்லிம் ஊழியர்களிடமிருந்து எழுந்தது. ஏற்கெனவே இருந்த கசப்பு உணர்ச்சி காரணமாக, இந்த குற்றசாட்டில் உண்மை இருக்கு என முஸ்லிம்கள் நம்பினர்.
இலங்கை அரசின் நடவடிக்கைகள்
விடுதலைக்கு பின்னர் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகைப் பறிக்கும் வண்ணம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. 1953 ஆம் ஆண்டு, பெளத்த சமயமே அந்நாட்டின் சமயமாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிங்களமே ஆட்சி மொழியாக இருக்கும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. 1972 ஆம் ஆண்டு சிங்கள பெளத்தர் மட்டுமே அந்நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வரமுடியும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் கல்வியைத் தரப்படுத்துதல் (Standardization of Education) என்ற சட்டம் அறிமுகப்படுத்தபட்டது. இச்சட்டத்தின் படி தமிழர்களை விட சிங்களர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் போதும் அவர்களுக்கு உயர்கல்வியும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலை தோன்றியது.  சிங்கள பெளத்த அரசியல் தலைவர்களின் இந்தச் செயல்கள் தமிழ் மக்கள் மத்தியில் தங்களது எதிர்காலம் பற்றிய ஐயங்களைத் தோற்றுவித்தன. தந்தை செல்வா, பின்னர் அமிர்தலிங்கம் போன்ற தமிழ் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காக குறள் கொடுத்து அறவழிப் போராட்டங்களை தொடர்ந்து பல ஆண்டுகள் நடத்தினர். எனினும், இலங்கை அரசின் போக்கில் மற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அறப்போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த தமிழ் இளைஞர்கள், தங்களுக்கிடையே பல்வேறு அமைப்புகளைத் தோற்றுவித்தனர். 1977 ஆம் ஆண்டிற்கு பிறகு டெலோ, எல்.டி.டி.ஈ, இ.பி.ஆர். எல். எப். பிளாட், ப்ரோடேக், ஈரான் டி. பி. எல். எஸ். ஆகிய போராளி இயக்கங்கள் ஆயுதப் போராட்டம் மூலமே இலங்கை அரசைப் பணிய வைக்க முடியும் என நம்பின. தவிரவும், இலங்கை அரசு, தமிழர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காது: எனவே இலங்கையில் தமிழ் ஏலம் என்ற தனி நாடு ஒன்ற உருவாக்குவதே தங்களது இலக்கு என வெளிப்படையாக அறிவித்தனர். இந்தத் தனி நாடு அறிவிப்பிற்குப் பின்னர், இலங்கை அரசுக்கும் தமிழ் போராளி இயக்கங்களுக்குமிடையே மோதல்கள் அதிகரித்தன.
வன்முறைப்பாதை
தமிழர்களின் உரிமை மீட்ப்புப் போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவளித்த போதிலும், அவர்களின் தனி ஈழக் கோரிக்கையைக் கிழக்கு மாகானதில் வசித்து வந்த முஸ்லிம்கள் ஏற்கவில்லை. (வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிதான் ஈழம்) ஒன்றுபட்ட இலங்கையில், ஜனநாயக பூர்வீகமான முறையில் அறவழிப் போராட்டங்களை நடத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என நம்பினர். தனி ஈழத்தில் தங்களது நலன்கள் பாதுகாப்பாக இராது என்றும், ஒன்று பட்ட இலங்கையில் மட்டுமே தாங்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எண்ணினார். ஆனால், தமிழ்ப் போராளிகளின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. மொழி அடிப்படையில் முஸ்லிம்கள் தனி ஈழத்தை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். தங்களிடமுள்ள ஆயுத வலிமையைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் தங்களது கோரிக்கையை ஏற்குமாறு செய்ய முடியும் என நம்ம்பினர்.
1980 க்கும் 1990 க்கும் இடைப்பட்ட, இந்த பத்து ஆண்டுகள், தமிழ் போராளிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல முச்ல்ம்களின் வாழ்க்கையிலும் திருப்பங்கள் நிறைந்த காலமாகவே இருந்தது. இந்த கால கட்டத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்களும் அரசுப் படையினருக்கும் பெரும் மோதல்கள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இலங்கைப் படையினரை எதிர்த்துப் போராடிய அதே நேரத்தில் தங்களுக்குள்ளும் இந்த இயக்கங்கள் போரிட்டுக் கொண்டன. இந்த சகோதர யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் (LTTE) கையே மேலோங்கியது. பிற போராளிக் குழுக்களை சார்ந்த தலைவர்களை ஒருவர் விடாமல் தேடிக் கண்டுபிடித்து விடுதலைப் புலிகள் கொன்றளிதனர். அரசியல் ரீதியில் போராடிய தமிழ்த்தலைவர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், உமா மகேஸ்வரன் ஆகியோரையும் விடுதலைப் புலிகள் விட்டு வைக்க வில்லை. விடுதலை போர்களத்தில் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டும், பிற இயக்கங்கள், தலைவர்கள் யாருமே இருக்க கூடாது என்ற பிரபாகரனின் பாசிச மனப்பான்மையே இந்த ஈவு இரக்கமற்ற படுகொலைகளுக்கு காரணமாகும்.
ஒரு பக்கம், பிற போராளி குழுக்களை சார்ந்த முன்னணித் தலைவர்களையெல்லாம் அளித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் கோபப் பார்வை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மீதும் திரும்பியது. ஈழக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்காத முஸ்லிம்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினர். விளைவு? 1980 க்கும், 1990 க்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் முஸ்லிம்கள் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தினர். முஸ்லிம்களின் தொழில் நிறுவனகள், பயிற்சி நிலையங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் ஆகிய அனித்தும் தாக்குதல்களுக்கு உள்ளாயின. தமிழர் பகுதிகளுக்கு வியாபாரத்திற்காக சென்ற சிறு வியாபாரிகளும், வயல்களுக்கு சென்ற சிறு கூலி தொளிலார்களும் 'சிங்கள அரசுக்கு உளவு சொல்பவர்கள்' என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனை வன்முறைகளுக்கு உச்சகட்டமாகள் 03.08.1990 அன்று காத்தான்குடி என்ற ஊரில் உள்ள கிராவல் தெரு பள்ளிவாசலில் காலை தொளிகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் வெளியிலிருந்து இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு 103 பேரைக் கொன்றனர். அதே ஊரில் உள்ள ஹுச்சைனிய பள்ளிவாசலும் தாக்கப்பட்டது. ஏறாவூர், கிரான்குளம், அழிஞ்சிப் பொத்தான், அகமது புரா, பள்ளிகொடா ஆகிய ஊர்களிலும் விடுதலைப் புலிகள் முஸ்லிம் தெருக்களில் புகுந்து தாக்கி ஆயிரக்கணக்கானவர்களை கொன்றனர்.
யாழ்பாணம் நகரில் வசித்து வந்த 70000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், விடுதலைப் புலிகளின் பயமுறுத்தல் காரணமாக தங்களது வீடு வாசல்கள், நில புலன்களை விட்டு விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. " இரண்டு மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்; இல்லையெனில் உங்களின் உயிர் மிஞ்சாது" என்ற விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இம்மக்கள் தங்களது வீடுகளிருந்து வெளியேறி ஓடினர். கடந்த இருபது ஆண்டுகளாகப் புத்தளம் மாவாட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். (27.12.2009 கொழும்பில் நடைபெற்ற அனைத்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷேவ், இம்மக்கள் தங்களது சொந்த வீடுகளில் 31.02.2010 க்குள் குடியமர்த்த படுவார்கள். அதற்க்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளார். ஆதாரம் : ஹிந்து நாளிதழ் 28.12.2009)
கிழக்கு வடக்கு மாகாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான போது, அவர்களது அவல நிலையினை படம் பிடித்துக் காட்டும் விதமாக அந்நாட்டுக் கவிஞர் வ.ஐ. ச. ஜெயபாலன் எழுதிய எழுதிய ஒரு கவிதையை கீழே கொடுத்துள்ளேன்.
" உங்கள் வீட்டையே திருடிக் கொண்டோம்
உங்கள் பிள்ளைகளின் உணவுகளைப் புசித்தோம்
உங்கள்த ொழுகைப் பாயில் புணர்ந்தோம்
மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம்
எச்சில் கைகளைத் துடைப்பதற்காக
உங்கள் புனித நூல்களை கிழித்தோம்
பாங்கொலி இன்றி முடிந்த அவ்விரவில்
தேவதைகள் தொலைந்து போயின
"

 
 
தொடரும்
   
Copyright © 2010 Kadayanallur.net . All rights reserved. Site Powered By IT HIGHWAY